செய்திகள்

இயக்குனர் விஹால் பரத்வாஜின் சர்ச்சைக்குரிய ‘ஹைதர் திரைப்படம் லண்டனில் திரையிடப்படுகின்றது

ஷேக்ஸ்பியர் நாடகத்தை தழுவி காஷ்மீர் பின்னணியில் விஷால் பரத்வாஜ் இயக்கி வெளியான ஹைதர்திரைப்படம் லண்டன் ஆசிய திரைப்பட விழாவில் இடம்பெறுகிறது. 1990-களில் ஜம்மு காஷ்மீர் இருந்த பின்னணியில், பிரபல ஷேக்ஸ்பியர் நாடகமான ஹாம்லெட்ஐ தழுவி எடுக்கப்பட்ட ஹைதர்திரைப்படம் லண்டனில் நடைபெறும் 17-வது லண்டன் ஆசிய திரைப்பட விழாவில் இடம்பெறுகிறது.

2014 வெளியாகி பலரது பாராட்டையும் பெற்ற சர்ச்சையான இயக்குனர் விஹால் பரத்வாஜ் இயக்கிய இத்திரைப்படம் ஆழந்த அரசியலைப் பேசும் படமாக அமைந்திருக்கின்றது. ராணுவ வீரர்களுக்கு எதிரான கருத்தாக்கங்கள் இருப்பதாகவும் காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவான படமாகவும் இருப்பதாக இந்த படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. ஷாஹித் கபூர், தபு நடித்த இந்தப் படம் கடும் எதிர்ப்புகளை மீறி கடந்த வருடம் வெளியான இததிரைப்படம் ஹரோ ஆட்ஸ் நிலையத்தில் மார்ச் 20ம் திகதி திரையிடப்பட இருக்கின்றது.