செய்திகள்

இரகசியத்தை வெளியிட்டார் மைத்திரி…!

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பையும் ஐக்கிய தேசிய கட்சியையும் இணைத்து கூட்டு அரசாங்கமொன்றை அமைப்பதற்கான ஒப்பந்தமொன்றை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஏற்படுத்திக்கொண்டிருந்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
2007ஆம்   ஆண்டு காலப்பகுதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்ததாகவும் ஆனால் இந்த ஒப்பந்தம் சில மாதங்களில் முறிவடைந்தமையை அடுத்து ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்த 27 பேருக்கு அமைச்சு பொறுப்புக்களை வழங்கி அவர்களை தனது பக்கத்திற்கு ஈர்ப்பதற்கு மஹிந்த ராஜபக்ஸ நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
1956ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பெற்றுக் கொண்ட வெற்றிக்கு இந்த ஆண்டுடன் 60 வருடங்கள் பூர்த்தியாவதனை முன்னிட்டு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் என்ற விதத்தில் அப்போது தானும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் அந்த கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்ரமவும் அலரிமாளிகையில் வைத்து இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதாகவும் ஆனால் இந்த ஒப்பந்தம் சில மாதங்களில் முறிவடைந்தமையை அடுத்து ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்த 27 பேருக்கு அமைச்சு பொறுப்புக்களை வழங்கி அவர்களை தனது பக்கத்திற்கு ஈர்ப்பதற்கு மஹிந்த ராஜபக்ஸ நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்ததாகவும் அங்கு  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
N5