செய்திகள்

இரட்டைப் பிரஜாவுரிமை வழங்குவதில் புதிய நடைமுறை

வெளிநாடுகளில் தங்கியிருக்கும் இலங்கையர்கள் இரட்டைப் பிரஜாஉரிமையை பெற்றுக் கொள்வதற்கான புதிய நிர்வாக முறையொன்றை இலங்கை அரசாங்கம் அமுலாக்கியுள்ளது.

இதனடிப்படையில் வெளிநாடுகளில் வாழும் சகல இலங்கையர்களும் இரட்டைப் பிரஜா உரிமைப் பெற்றுக் கொள்வதற்கான உரிமையை பெறுவதுடன் இரட்டைப் பிரஜாவுரிமைக்காக விண்ணப்பிக்கவும் முடியும். அத்துடன் இலங்கையில் தங்கள் சிவில் உரிமையை முழுமையாக பெற்றுக் கொள்ளும் வகையில் இந்தத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள் ஒழுங்கு, கிறிஸ்தவ அலுவல்கள், அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.

இரட்டைப் பிரஜா உரிமையை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பதாரி 250,000 ரூபாவை கட்டணமாக செலுத்த வேண்டும். அவ்வாறே, துணைவி அல்லது கணவன் ஆகியோர் 50,000 ரூபாவையும் 22 வயதுக்கு குறைவான, மணம் முடிக்காத ஒரு பிள்ளைக்காக 50,000 ரூபாவையும் செலுத்த வேண்டும்.

ஜப்பான், மத்தியகிழக்கு நாடுகளில் வாழும் இலங்கையர்கள் பல்வேறு காரணங்களுக்காக அந்நாட்டு குடியுரிமையை பெற்றுக் கொண்டுள்ள போதிலும் இலங்கைக்கான குடியுரிமையை இழந்தே அந்நாட்டு குடியுரிமையை பெற்றுக் கொண்டுள்ளனர். மீண்டும் இவர்கள் இலங்கைக்கான குடியுரிமை பெற வேண்டுமென்றால் அந்த நாட்டின் குடியுரிமையை இழக்க வேண்டும். இவர்கள் இரட்டைப் பிரஜாவுரிமைக்காக விண்ணப்பிக்க முடியாத நிலை காணப்படுகிறது.

எனினும், ஐக்கிய இராச்சியம், கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, நியுசிலாந்து, இத்தாலி, சுவீடன், சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இரட்டைப் பிரஜாவுரிமையை பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்புகள் காணப்படுகின்றன. இந்நாடுகளில் வாழும் இலங்கையர்கள் இரட்டைப் பிரஜாவுரிமையைப் பெற்றுக் கொள்ள முடியும். அந்த நாடுகளில் மீண்டும் இலங்கை குடியுரிமையைப் பெற்றுக் கொள்ளும் போது அந்நாட்டு குடியுரிமை பறிக்கப்பட மாட்டாது.

இதனடிப்படையில் மேற்படி 9 நாடுகளில் வாழும் இலங்கையர்கள் அந்நாடுகளில் இருந்தவாறே இரட்டைப் பிரஜாவுரிமைக்காக விண்ணப்பிக்க முடியும். அவ்வாறில்லையானால் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியிலும் குடிவரவு, குடிய கல்வு திணைக்களத்திற்கு வருகை தந்து விண்ணப்பிக்கலாம் அல்லது www.immigration.gov.lk என்ற இணையத்தள முகவரிக்கு சென்று விண் ணப்பங்களை தரவிறக்கம் செய்து கொள்ள