செய்திகள்

இரட்டை குடியுரிமை கேட்டு 4000 பேர் விண்ணப்பம்

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களில் சுமார் 4000 பேர் இரட்டை குடியுரிமை வழங்கக்கோரி விண்ணப்பித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரட்டைகுடிஉரிமை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுவிடம் இவ் விண்ணப்பங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதுவரை 400 பேருக்கு இரட்டைக்குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதுடன் இன்னும் 500 பேருக்கு எதிர்வரும் வாரங்களில் வழங்கப்படவுள்ளது.

1987 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை 34 ஆயிரம் பேருக்கு இரட்டைக்குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பேச்சாளர் லக்ஷான் சொய்சா தெரிவித்துள்ளார்.