செய்திகள்

இரட்டை பிரஜாவுரிமையாளர்களுக்கு இனி தேர்தலில் போட்டியிட முடியாது : அஜித் பி பெரேரா

இனிவரும் காலங்களில் இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்களுக்கு பொதுத் தேர்தலில் போட்டியிட முடியாதவகையில் 19வது அரசியலமைப்பு திருத்தத்தினூடாக சட்டத்திட்டங்களை உள்ளடக்கியுள்ளதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் மீண்டும் நாட்டின் பிரஜை என்ற அந்தஸ்தை பெற்றுக்கொண்டு தேர்தலில் போட்டியிட முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.