செய்திகள்

இரணைமடு ஆலயத்தின் வெளிவீதியை இராணுவத்திடமிருந்து மீட்டுத்தருமாறு கோரிக்கை

கிளிநொச்சி இரணைமடு ஆலயத்தின் வெளிவீதி மற்றும் இரணைமடு குளத்திற்கும் செல்லும் தீர்த்தப் பாதையை இராணுவத்திடமிருந்து பெற்றுத்தருமாறு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தின் ஆலய பரிபாலனசைபயினர் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நேற்று முன்தினம் ஆலயத்திற்குச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரிடம் ஆலய பரிபாலனசபையினர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ஆகியோருக்கு உடனடியாக கடிதம் மூலம் தெரியப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.