செய்திகள்

இரணைமடு கனகாம்பிகை ஆலய மகோற்சவப் பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பம்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற இரணைமடு திருவருள்மிகு கனகாம்பிகை அம்பாள் ஆலய வருடாந்த பெருந்திருவிழா 24.04.2015 வெள்ளிக்கிழமை நண்பகல் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 11 நாட்கள் இடம்பெறும்.

தொடர்ந்து 8 ஆவது நாள் வேட்டைத்திருவிழா திருவையாறு சித்திவிநாயகர் ஆலயத்தில் இடம்பெறுவதுடன், அன்றிரவு சப்பறத் திருவிழா இடம்பெறும்.

9 ஆம் நாள் 02.05.2015 சனிக்கிழமை தேர் திருவிழா நிகழ்வானது வசந்த மண்டப பூசையை தொடர்ந்து காலை 9.30 மணிக்கு பரிவார மூர்த்திகள் சகிதம் மூன்று சித்திர தேரில் ஆரோகணிப்பார்.
03.05.2015 ஞாயிற்றுக்கிழமை காலை ஆலயத்தின் தீர்த்தத் திருவிழாவானது இரணைமடு நீர்தேக்கத்தில் இடம்பெறும்

அன்று மாலை திருவிளக்கு பூஜை இடம்பெறுவதுடன் மரபு முறைப்படி அடியார்கள் இரணைமடு தீர்த்த நீரை எடுத்து வந்து அம்பாளின் பாதங்களில் அபிசேகம் செய்வதுடன், கும்பதீர்த்தம் எடுக்கும் நிகழ்வும் வளந்து பானைகளும் ஏனைய பானைகளும் வைத்து பொங்கும் நிகழ்வும் இடம்பெறும்

அன்று இரவு கொடியிறக்கம் இடம்பெறும்.

04.05.2015 காலை சங்காபிஷேகம் இடம்பெறும். மாலை பூங்காவனத் திருவிழா இடம்பெறும். அன்றிரவு பூந்தண்டிகையில் அம்பாள் வீதிவலம் வருவார்.

மறுநாள் வைரவர் மடையுடன் பெருந்திருவிழா நிறைவுறும்.

இரணைமடு கனகாம்பிகை ஆலய பெருந்திருவிழாவில் உள்நாட்டில் இருந்து மட்டுமல்லாது வெளிநாடுகளில் வாழும் அடியவர்களும் பக்திபூர்வமாக பங்கேற்பது சிறப்பம்சமாகும்.