செய்திகள்

இரண்டாவது ஓரு நாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி

ஆரம்பதுடுப்பாட்ட வீரர் திலகரட்ண டில்சானின் அபாரமான சதத்தின் காரணமாக நியுசிலாந்திற்கு எதிரான இரண்டாவது ஓரு நாள் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது.
ஹமில்டனில் இன்று நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்களையும் இழந்து 248 ஓட்டங்களை பெற்றது.
நியுசிலாந்து அணி சார்பில்அணிதலைவர் பிரென்டன் மக்கலம் அபாராமாக துடுப்பெடுத்தாடி 99 பந்துகளில் 117 ஓட்டங்களை பெற்றபோதிலும் ஏனைய வீரர்கள் பிரகாசிக்காததால் அணியால் அதிகளவு ஓட்டங்களை பெற முடியவில்லை, மூன்று விக்கெட்டிற்கு 158 ஓட்டங்கள் என்ற பலமான நிலையில் நியுசிவாந்து அணி ஓரு சந்தர்ப்பத்தில் காணப்பட்ட போதிலும், நான்கு முக்கிய வீரர்களின் ரன்அவுட்கள் காரணமாக அணியால் 249 ஓட்டங்களை மாத்திரம் பெறமுடிந்தது.
இலங்கை அணி சார்பில் சுழற்பந்துவீச்சாளர் ரங்கன ஹெரத் 36 ஓட்டங்களை கொடுத்து இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பபெடுத்தாடிய இலங்கை அணி 14 பந்துகள் மீதமிருக்கையில் தனது வெற்றி இலக்கை எட்டியது,திலகரட்ண தில்சான் அபாரமாக துடுப்பெடுத்தாடி 127பந்துகளில் 116 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.