செய்திகள்

இரண்டு சரக்கு ரயில்கள் நேர்க்கு நேர் மோதி விபத்து (படங்கள்)

மலையக ரயில் மார்க்கத்தின் வட்டகொடை ரயில் நிலையத்திற்கு அருகில் இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானமை தொடர்பில் விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

விசாரைணைக் குழுவின் அங்கத்தவர்கள் சம்பவ இடத்திற்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் எல்.ஏ.ஆர். ரத்நாயக்க குறிப்பிடுகின்றார்.

நாவலப்பிட்டியில் இருந்து ஹப்புத்தளை நோக்கிப் பயணித்த சரக்கு ரயிலும், பதுளையில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த மற்றுமொரு சரக்கு ரயிலும் 09.06.2015 அன்று மாலை 5.45 மணியளவில் மோதி விபத்திற்குள்ளாகின.

சரக்கு ரயிலொன்றின் பெட்டி தடம்புரண்டிருந்தமை குறிப்பிடதக்கது.

எனினும் இரு புகையிரதத்தின் சாரதிகள் புகையிரதத்திலிருந்து பாய்ந்து தங்களின் உயிர்களை காப்பாற்றிக் கொண்டுள்ளனர்.

இரு புகையிரதத்திலும் பயணித்த நான்கு பேர் சிறுகாயங்களுடன் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

எனினும் குறித்த இரு ரயில்களும் 10.06.2015 அன்று காலை கண்டி ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளது.

மலையயக ரயில் சேவை வழமைக்கு மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 DSC00145 DSC00151 DSC00165 DSC00175 DSC00182 DSC00183 DSC00184 DSC00185 DSC00191