செய்திகள்

இரண்டு மாதத்தில் தேர்தல் நடக்கும் என்கிறார் விஜேதாஸ ராஜபக்ஷ

இன்னும் 2 மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடக்குமென நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வென்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் இரண்டு மாதத்தில் பொதுத் தேர்தல் நடக்கவுள்ளது. அந்த தேர்தலில் இன்னும் 5 வருடங்களுக்கு எமது ஆட்சியை தொடர செய்வதற்காக மக்கள் ஆணையை வழங்க வேண்டும். கடந்த 40 வருட காலங்கலாக செய்ய முடியாத பல விடயங்களை 150 நாட்களில் நாம் செய்துள்ளோம். இன்னும் செய்ய மக்கள் தொடர்ந்து எம்மை ஆதரிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.