செய்திகள்

இரண்டு வயது குழந்தையொன்று கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட , வெளிஓயா பகுதியில் இரண்டு வயது குழந்தையொன்று கிணற்றில் விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.

வெளிஓயா சென் எலியாஸ் தோட்டத்தில், இச்சம்பம்பவம் இன்று  புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

குழந்தையின் தாய் தண்ணீரெடுப்பதற்காக சென்றபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குழந்தையை உடனடியாக மீட்டு வெளிஓயா தோட்ட வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக வட்டவளை வைத்தியலைக்கு கொண்டுச் சென்றபோது அங்கு குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

இதுதொடர்பில் வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

DSC09941