செய்திகள்

இரண்டு வருடங்கள் கடூழிய சிறையில் இருந்ததாக உணர்ந்தேன்: சிராணி பண்டாரநாயக்க

இன்றைய நாள் மிக முக்கியமான ஒரு நாள் எனவும் ஏனென்றால் நேரமும் இயற்கையும் நீதியை கொண்டுவந்த நாள் இது என்றும் இன்றைய தனது பதவி விலகல் வைபவத்தில் நேற்று பிரதம நீதியரசராக மீண்டும் நியமனம் பெற்ற கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு உயர்நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை நடைபெற்ற இந்த பதவி விலகல் வைபவத்தின்போது இவ்வாறு தெரிவித்த அவர் கடந்த இரண்டு வருடங்களும் கடூழிய சிறையில் வாழ்ந்ததாக உணர்ந்ததாகவும் தன்மீது அநீதியாக பொய்யான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டதாகவும் கூறினார்.