செய்திகள்

இராஜதந்திர கடவுசீட்டை பயன்படுத்தி 6 நாடுகளுக்கு சென்று வந்த விமலின் மனைவி

போலியான பிறந்த திகதியில் இராஜதந்திர கடவுச் சீட்டைப் பெற்றிருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைதாகி தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி, ஷஷி வீரன்ச, இராஜதந்திர கடவுச் சீட்டைப் பயன்படுத்தி 2010 செப்டம்பருக்குப் பின்னர் ஆறு தடவைகள் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

2010 செப்டம்பரில் தனது இராஜதந்திர கடவுச் சீட்டைப் பெற்றுக்கொண்ட திருமதி வீரவன்ச, கோலாலம்பூருக்கு அதேமோதம் பயணம் செய்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதனையடுத்து இரண்டு தடவைகள் அவர் துபாய் சென்றிருக்கின்றார். அதன்பின்னர் மும்பாய் செய்ற அவர், சிங்கப்புருக்கும் இராஜதந்திர கடவுச் சீட்டில் சென்றிருக்கின்றார்.

வழமையான கடவுச் சீட்டில் இருப்பதைபோலல்லாமல் தவறான தகவல்களைக் கொடுத்து இராஜதந்திர கடவுச் சீட்டைப் பெற்றுக்கொள்வது தண்டனைக்குரிய பாரதூரமான குற்றம் என குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.