செய்திகள்

இராணுவச் சதி: மகிந்தவை விசாரிக்க சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரும் பொலிஸ்

ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து ஆட்சியைத் தக்கவைப்பதற்கான இராணுவச் சதி முயற்சி ஒன்றை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ மேற்கொண்டாரா என்பது குறித்து அவரையும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபாயவையும் விசாரணை செய்வதற்கு சட்டமா அதிபரின் ஆலோசனையை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு கோரியுள்ளது.

இராணுவச் சதி முயற்சி தொடர்பில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அறிக்கைகள் சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த கட்ட நடவடிக்கக்காக திணைக்களத்தின் பதிலையே பொலிஸ் எதிர்பார்த்திருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இந்தவிடயம் தொடர்பில் இராணுவத் தளபதி, கடற்படைத் தளபதி மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் வாக்குமூலங்கள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளன. முன்னாள் பிரதம நீதியரசர் மோஹான் பிரிஸ+ம் இது தொடர்பில் விசாரிக்கப்பட்டுள்ளார்.