செய்திகள்

இராணுவத்தால் சுவீகரிக்கப்பட்ட காணிகளை மீளளிக்குமாறு கோரி வாகரையில் மக்கள் ஆர்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்டம் வாகரை பிரதேசத்தில் 233வது இராணுவ படைப்பிரிவு தலைமையகத்திற்காக சுவீகரிக்கப்பட்டுள்ள தமது காணிகளை மீளப் பெற்றுத் தரக்கோரி காணிகளின் உரிமையாளர்கள் இன்று புதன்கிழமை வாகரை பிரதேச செயலகம் முன்பாக ஒன்று கூடி ஆர்பாட்டம் செய்தனர்.

இந்த ஆர்பாட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னனி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட முன்னனி பிரமுகர்;களும் கலந்து கொண்டு தமது ஆதரவை தெரிவித்திருந்தனர்.

அந்த மகஜர் வருமாறு:
கிழக்கில் யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட 2006ஆம் ஆண்டில் மே மாதத்தில் முருக்கையடிமுனை கிராமத்தினை விட்டு இடம்பெயர்ந்தோம் பின்னர் 2007ஆம் ஆண்டில் மார்ச் மாதம் நாங்கள் மீள் குடியேறுவதற்க்காக எமது கிராமத்திற்க்கு திரும்பியபோது எமது வாழ்விடங்களில் படையினர் முகாம் இட்டுள்ளதை தெரிந்து கொண்டோம்.  நாம் வாழ்ந்த கிராமமானது வளமிக்க மண்னையும் நிரந்தர வருமானம் தரத் தக்க மரங்களையும் கொண்டிருந்ததுடன் வளமிக்க மண் என்பதால் வீட்டுத் தோட்டத்தின் ஊடாக அன்றாடத் தேவைகளை நிறைவு செய்யத்தக்க வழிகளை கொண்ட கிராமமாக இருந்தது.

ஆற்றையும் கடலையும் அண்மித்ததாக எமது கிராமம் இருந்ததால் விரும்பிய நேரத்தில் கடற’றொழிலை செய்வதற்கு மிக இலகுவாக இருந்ததுடன் கடற்றொழில’ உபகரணங்களுடன் பயணப்படுவதும் மிக இலகுவானதாகவும் இருந்தது.

மக்களின் அனைத்து வாழ்வாதாரங்களையும் தன்னகத்;தே கொண்டிருந்த இக்கிராமத்தில் வாழ்ந்தத எம்மை அங்கு மீளக் குடியமர்த்தாமல் ஊரியன்கட்டு என்ற பிரதேசத்தில் வீடமைப்புக்களை செய்து குடியேற்றியுள்ளீர்கள்.  முருக்கையடிமுனையில் சுமார் 80பேர்ச்சுக்கு மேற்பட்ட காணியில் வசித்து வந்த எமக்கு தற்போது வெறும் 18 பேர்ச் அளவுள்ள காணிகளே வழங்கப்பட்டுள்ளன.அத்துடன் வீடமைப்புக்களை செய்த இடமானது எவ்வித வளங்களையும் தன்னகத்தே கொண்டிருக்காத நிலமாக உள்ளது.ஊரியன் கட்டில் குடி தண்ணீரை பெற்றுக் கொள்வதற்கே கடும் கடின நிலையில் உள்ளது.

இங்கு எவ்வாறு நாம் வீட்டுத் தோட்டங்களை அமைத்து எமது வாழ்வை நகர்த்துவது.தற்போது மிளக் குடியேற்றப்பட்டுள்ள ஊரியன் கட்டில் இருந்து கடல் மற்றும் ஆற்று மீன் பிடிக்கு செல்வதாயின் நாளந்தம் ஒரு கிலோ மீற்றருக்கு மேல் நடந்து செல்லவேண்டி இருப்பதுடன் மீன் பிடி உபகரணங்களையும் தூக்கி செல்ல வேண்டிய நிலை காணப்படுகிறது.இதனால் இரவு நேர மீன்பிடி உட்பட எமது வாழ்வாதரமான மீன்பிடி நடவடிக்கையே ஒட்டுமொத்தமாக அழிவுக்குள’ளாகி வருகின்றது.

47 குடும்பங்கள் மீள் குடியமர்த்தப்ட்டுள்ள ஊரியன் கட்டில் நண்ணீரை பெற்றுக் கொள்ள மிகக் கஸ்ரப்படுவதுடன் கரல் கலந்த நிலத்தடி நீரினையே சில இடங்களில் பெற்றுக்கொள்ள முடிகின்றது.மழை நாட்க்களில் வெள்ளம் தேங்கி நிற்க்கும் இக் கிராமத்தில் போக்குவரத்து முற்றாக செயல் இழப்பதுடன் தொற்று நோய்களும் பரவி எங்களை வாட்டுகிறது.  மட்டு திருமலை பிரதான வீதிக்கருகில் இரு க்கும்எமது கிராமமான முருக்கையடிமுனை கிராமத்தில் இருந்தபோது எவ்வித போக்குவரத்து வசதியீனங்களையும் நாம் எதிர்கொண்டதில்லை.

ஆனால் தற்போது ஊரியன் கட்டில் இருந்து சுமர் ஓரு கிலோ மீற்றர் தூரம் நடந்து சென்றால்தான் பிரதான வீதிக்கு செல்லமுடிகிறது.வயோதிபர்கள் நோயாளிகள் கடும் அவஸ்த்தைப் படுவதுடன் பாடசாலை சிறார்கள் நடந்து சென்று வரும் போது ஆபத்துக்களையும் எதிர்கொள்ள நேரிடுகிறது. 2007 ஆம் ஆண்டில் ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழியில் எழுத்தப்பட்ட கடிதங்களை கையளித்து எம்மை அச்சுறுத்தி எமது கையொப்பங்களை பெற்றுக்கொண்டனர்.அப்போது இருந்த நிலையில் அச்சத்தாலும் அச்சுறுத்தல்களாலும் நாம் அக் கடிதங்களில் கையெழுத்திட்டிருந்தோம்.எமது காணிகள் அக் கடிதங்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக எமது விருப்பத்திற்கு மாறாக கையகப்படத்தப்பட்டதாக தற்போது அறிகின்றோம்.”

என தெரிவிக்கப்பட்டுள்ள மகஜரை பெற்றுக் கொண்ட பிரதேச செயலாளர் மகஜரை அரசாங்க அதிபரின் கவனத்திற்கு முன் வைப்பதாக காணி உரிமையாளர்களிடம் பதில் அளித்தார்.

VH 2 VH