செய்திகள்

இராணுவத்தினரின் ஹோட்டல்களை வெளியாருக்கு வழங்க திட்டம்.

வடக்கு , கிழக்கு பகுதிகளில் இராணுவத்தினால் நடத்திச் செல்லப்படும் சுற்றுலா விடுதிகள் மற்றும் ஹோட்டல்கள் போன்றவற்றை கேள்வி மனுக் கோரல் (ரென்றர்) அடிப்படையில் தனியார் பிரிவினருக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிய வருகின்றது.

முப்படையினர் வியாபார ரீதியிலான செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கமையவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி எதிர்வரும் காலத்தில் வெளியாருக்கு இந்த விடுதிகளும் ஹோட்டல்களும் கேள்வி மனுக்கோரல் அடிப்படையில் வழங்கப்படவுள்ளது.