செய்திகள்

இராணுவத்தில் சேர்க்கப்பட்ட மற்றொரு தமிழ் இளைஞர்களின் பயிற்சி நிறைவு

இலங்கை இராணுவத்துக்கு சேர்க்கப்பட்ட மற்றும் ஒரு தொகுதி தமிழ் இளைஞர்களின் பயிற்சி நிறைவுற்று அணிவகுப்பு அண்மையில் முல்லைத்தீவில் நடைபெற்றதாக இராணுவம் அறிவித்துள்ளது.

இந்த அணிவகுப்பில் பயிற்சிகளை முடித்துக்கொண்ட 46பேர் பங்கேற்றனர். இவர்களுக்கு நான்கரை மாதகால அடிப்படைப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

புதுக்குடியிருப்பு பயிற்சிப் பாடசாலையில் இலங்கையின் 15 எறிகணை பயிற்றுவிப்பாளர்களின் மேற்பார்வையில் மோட்டார் திருத்துதல், மின்சார இணைப்பு உட்பட பல்வேறு துறைகளில் இவர்கள் பயிற்றுவிக்கப்பட்டனர்.

அணிவகுப்பின்போது முல்லைத்தீவின் பாதுகாப்பு தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விதானகே, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் கேதீஸ்வரன் ஆகியோர் பிரதம அதிதிகளாக பங்கேற்றனர்.