செய்திகள்

இராணுவத்தை பயன்படுத்தும் சட்டத்தை அரசாங்கம் கைவிடவேண்டும்.

பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும், சட்டமொழுங்கை உறுதிசெய்வதற்காகவும் இராணுவத்தை நாடுமுழுவதும் நிலை கொள்ளச்செய்யும் முன்னைய அரசாங்கத்தின் நடவடிக்கையை புதிய அரசாங்கமும் தொடரக்கூடாது, கைவிவேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இது குறித்து ஆராயுமாறும்,சமீபத்தில் அவர் வெளியிட்ட உத்தரவை வாபஸ் பெறுமாறும்,அடுத்த தடவை இந்த உத்தரவை நீடிக்கவேண்டாமெனவும் சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கையொன்றில் வேண்டுகோள் விடுத்துள்ளது.
முன்னைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை கடந்த வாரம் மைத்திரிபால சிறிசேன நீடித்திருந்தார்.