செய்திகள்

இராணுவம் நடத்தும் விடுதியில் மது விற்பளை: விரிவான விசாரணைககு உத்தரவு

வாதுவை இராணுவ சுற்றுலா விடுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் விரிவான விசாரணைகளை நடத்துமாறு இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் கிறிசாந்த டி சில்வா இராணுவ பொலிஸாருக்கு பணித்துள்ளார்.

இராணுவத்தினரால் வாதுவையில் நடத்தப்படும் ‘லயா பீச்’ என்ற சுற்றுலா விடுதியில் செல்லுபடியான அனுமதிப்பத்திரம் இல்லாத நிலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த மதுசார போத் தல்கள் கலால் திணைக்களத்தின் சுற்றிவளைப்பின் போது கைப்பற்றப்பட்டிருந்தன.

கலால் திணைக்களத்தின் அதிகாரிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த ஹோட்டலில் கடமையிலிருந்த இரண்டு வேலையாட்கள் கைதுசெய்யப்பட்டதுடன் 843 போத்தல்களும் கைப்பற்றப்பட்டன.

வாதுவையிலுள்ள இராணுவ சுற்றுலா விடுதி கடந்த 1991 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டு அண்மையில் ‘லயா பீச்’ என பெயர்மாற்றம் செய்யப் பட்டது.