செய்திகள்

இராணுவ ஆக்கிரமிப்பு நிலங்களில் மக்களை மீள குடியமர்த்த ஜனாதிபதி பிரதமர் இணக்கம்

வடக்கு மற்றும் கிளலகில் இராணுவம் ஆக்கிரமித்த இடங்களில் அவர்களை வெளியேற்றி மக்களை மீள குடியமர்த்த வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதி மற்றும் பிரதமரை இன்று கொழும்பில் சந்தித்தபோது கோரிக்கை விடுத்ததாகவும் அவர்களின் இந்த கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதியும் பிரதமரும் இதனை கட்டம் கட்டமாக செய்வதாகவும் உறுதியளித்ததாக கூட்டமைப்பு தெரிவித்தது.

இந்த சந்திப்பின்போது , இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்கள் பற்றிய ஒரு ஆவணத்தை தாம் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கையளித்ததாகவும் கூட்டமைப்பு தெரிவித்தது.