செய்திகள்

இராணுவ உயர் கூட்டத்தில் கண் அயர்ந்ததற்காக வட கொரிய பாதுகாப்பு அமைச்சர் விமான எதிர்ப்பு ஏவுகணையால் சுடப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார்

வட கொரியாவின் பாதுகாப்பு அமைச்சர் கியோன் யொங் சொல் இராணுவ உயர் கூட்டம் ஒன்றில் நித்திரையில் ஆழ்ந்ததற்காகவும் அந்த நாட்டின் ஜனாதிபதி கிம் ஜொங்க் அன் க்கு அவமரியாதை செய்ததற்காகவும் மரண தண்டனை விதிக்கப்பட்டுளார்.

இராணுவ உயர் அதிகாரிகள் உட்பட நூற்றுக்கனக்கனவர்கள் பார்வையிட விமான எதிர்ப்பு ஏவுகணை  மூலம் சுடப்பட்டு இவருக்கான மரண தண்டனை கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டது.

இவருக்கான மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமையை வட கொரிய செய்தி நிறுவனம் உயுதி செய்துள்ளது.

ஜனாதிபதி கிம் ஜொங்க் அன் க்கு எதிராக இவர் முறைப்பாடுகளை செய்திருந்ததாகவும் அவரது சில உத்தரவுகளை நிறைவேற்ற தவறி இருந்ததாகவும் வட கொரிய அரசியல்வாதிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஏப்பிரலில் இராணுவ உயர் கூட்டமொன்றில் இவர் கண் அயர்ந்தற்காக மூன்று நாட்களின் பின்னர் கைது செய்யப்பட்டு எந்தவித சட்ட நடவடிக்கைகளும் இன்றி இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுளார்.

தனது ஆட்சிக்கு இடையூறாக இருந்த 15 அதிகாரிகளுக்கு கிம் ஜொங்க் அன் கடந்த மாதம் மரண தண்டனை விதித்ததாகவும் அவரது தகப்பன் 2011 ஆம் ஆண்டு மறைந்ததன் பின்னர் பதவி ஏற்றபின்னர் இதுவரை 70 அதிகாரிகளுக்கு அவர் மரண தண்டனை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Hyon-Yong-Chol-North-Korea-execution-missile-288161

பாதுகாப்பு அமைச்சர் கொல்லப்பட்ட தொலைக்காட்சி செய்தியை ஒருவர் பார்க்கிறார்

1

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் கடந்த ஏப்பிரலில் நடந்த சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் தான் இறுதியாக கியோன் யொங் சொல் உரையாற்றியிருந்தார்

2

கிம் ஜொங்க் அண்ணுக்கு வலதுபுறத்தில் நிற்கும் கியோன் 2010 முதல் ஜெனரலாக இருந்து வருகிறார்

3

2011 இல் வட கொரிய ஜனாதிபதியும் கிம் ஜொங்க் அண்ணின் தந்தையுமான கிம் ஜொங்க் இல்லின் சவப்பெட்டியை சுமந்து வந்த 7 பேரில் கின் ஜொங்க் அண்ணைத் தவிர ஏனைய அனைவரும் கொல்லப்பட்டுள்ளார்கள் அலல்து வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள்