செய்திகள்

இராணுவ வீரரை சுட்டுக்கொன்ற சகாக்கு மரண தண்டனை

ரி. 56 ரக துப்பாக்கியால் சக இராணுவ வீரரை சுட்டுக்கொன்ற இராணுவ வீரருக்கு நேற்று யாழ். மேல் நீதிமன்ற நீதவான் திருமதி கனகா சிவபாத சுந்தரம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

2007 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி காங்கேசன் துறை நலன்புரி நிலையத்தில் வைத்து உபாலி ரலபனாவ என்ற சக இராணுவ வீரரை பொன்னம் பெரும ஆராச்சிகே வசந்த என்ற இராணுவ அதிகாரி (வயது 39) ரி. 56 ரக துப்பாக்கியால் சுட்டுக் கொன் றுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8ஆம் திகதியே சட்டமா அதிபர் திணைக்களம் யாழ். மேல்நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தியது.

இதன்படி தொடர்ந்து நடைபெற்ற வழக்கில் பொன்னம்பெரும ஆராச்சிக்கே வசந்த (39) மீதான குற்றம் நிரூபிக்கப்பட் டதையடுத்து நேற்று மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.