செய்திகள்

இராமேஸ்வர மீனவர்கள் காலவரையறையற்ற வேலை நிறுத்தம்

இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை உடனே விடுதலை செய்யவேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இன்று முதல் காலவரையறையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் 45 நாட்கள் மீன்பிடி தடைகாலம் கடந்த வாரம் முடிவடைந்ததையொட்டி மீனவர்கள் கடலுக்கு புறப்பட்டனர். மீன்பிடி தடைகாலம் முடிந்து கடலுக்கு சென்ற 2 நாளிலேயே எல்லை தாண்டி வந்ததாக கூறி 14 இராமசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்து சென்றது. இச்சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என தமிழக ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.