செய்திகள்

இரு நாள் பயணத்தை முடித்துக்கொண்டு டில்லி திரும்பினார் மோடி

இலங்கைக்கான தன்னுடைய இரண்டு நாள் பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று அதிகாலை புதுடில்லியைச் சென்றடைந்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவரை வழியனுப்பிவைத்தார்.

இரண்டு நாட்களில் அநுராதபுரம், மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கும் சென்ற மோடி, 40 க்கும் மேற்பட்ட முக்கிய சந்திப்புக்களில் கலந்துகொண்டிருந்தார். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான 4 முக்கிய உடன்படிக்கைகளிலும் அவர் கைச்சாத்திட்டார்.