செய்திகள்

இரு பஸ்வண்டிகள் மோதிய விபத்தில் 24 பேர் காயம்

கல்பிட்டி – புத்தளம் பிரதான வீதியில் மாம்புரி பகுதியில் இரண்டு பஸ் வண்டிகள் மோதி விபத்துக்குள்ளானதில் 24 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கல்பிட்டியிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் வண்டியும் கல்பிட்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

காயமடைந்தவர்களில் 12 பெண்களும் 3 சிறுவர்களும் உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.