செய்திகள்

இரு பிள்ளைகளுக்கு மேல் பெற அனுமதிக்க வேண்டாம்: பொதுபலசேனா அமைப்பு

Bodu-Bala-Senaஇலங்கையின் சனத்தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்தும் வகையில் குடும்பமொன்றுக்கு அதிகபட்சம் இரண்டு பிள்ளைகளை மட்டுமே பெற்றுக்கொள்ள முடியுமென்ற திட்டம் சட்டமாக உள்வாங்கப்பட வேண்டுமென பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

கிருலப்பனையிலுள்ள பொதுபலசேனா அமைப்பின் தலைமை அலுவலகத்தில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவ்வமைப்பின் இணைப்பாளர் டிலந்த விதானகே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

வில்பத்து வனப்பகுதியை அழித்து குடியிருப்புக்களை அமைக்கும் செயற்பாடுகளை அமைச்சர் ரிசாத் பதியுதீன் முன்னெடுத்து வருகின்ற நிலையில் மறிச்சுட்டிக் காட்டில் வாழ்ந்த குடும்பங்களுக்கும் வில்பத்து வனப்பகுதியில் குடியிருப்புக்கள் அமைத்துக் கொடுக்கப்டப்டுள்ளது.

யுத்த காலத்தில் பாதிக்க்படபடு வெளியேறியோரை விட அதிகளவு மக்களை இப் பகுதியில் அமைச்சர் குடியேற்றியுள்ளார். இதற்கு சனத்தொகை அதிகரிப்பே காரணமாகும்.

இலங்கையில் சனத்தொகை அதிகரிப்பு வீதம் அதிகமாகக் காணப்படுமானால் மாடிவீட்டுத் திட்டங்களை அசாங்கம் அமுல்ப்படுத்தியிருக்க வேண்டும். மாறாக காடுகளை அழித்து குடியிருப்புக்களை அமைக்கக் கூடாது. இலங்கையின் சனத்தொகை அதிகரிப்பு வீதத்தை கட்டுப்படுத்துவதற்கு பொதுபலசேனா அமைப்பு இரண்டு யோசனைகளை அரசாங்கத்திடம் முன்வைக்கிறது.