செய்திகள்

இரு மாதத்திற்குள் 3 மரக்கடத்தல்களை முறியடித்த ஓமந்தைப் பொலிசார்

வவுனியா, ஓமந்தையில் கடந்த இரு மாதத்திற்குள் மூன்று மரக்கடத்தல் நடவடிக்கைகள் முறியடிக்கப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன்குமார தெரிவித்துள்ளார்.

ஓமந்தையில் இடம்பெற்று வரும் மரக்கடத்தல்கள் குறித்து கேட்ட போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கடந்த மாதம் 7 ஆம் திகதி டாட்டா வாகனம் ஒன்றில் கடத்தப்பட்ட 11 முதிரை மரக்குற்றிகள் ஓமந்தை, கொம்பு வைத்தகுளம் பகுதியில் வைத்து பிடிக்கப்பட்டதுடன், அவ்வாகனத்தின் சாரதியும் கைது செய்யப்பட்டார். குறித்த நபருக்கு எதிராக வவுனியா நீதிமன்றின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று கடந்த 23 ஆம் திகதி டிப்பர் வாகனம் ஒன்றில் கடத்தபடபட்ட 23 முதிரை மரகடகுற்றிகள் ஓமந்தை, வண்ணாங்குளம் பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டது. இவ் மரக் கடத்தலுடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டு வவுனியா நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். கடந்த வெள்ளிக்கிழமை ஓமந்தை, கோவில்குஞ்சுக்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 52 பாலை மரத் திராந்திகளும் மீட்கப்பட்டுள்ளது. தற்போது பொலிசாரின் நடவடிக்கை காரணமாக ஓமந்தையில் மரக்கடத்தல் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

IMG_2481

N5