செய்திகள்

இரு ஹெலிக்கொப்டர்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதில் பிரான்சின் பிரபல விளையாட்டு வீரர்கள் மூவர் பலி

ஆர்ஜன்டீனாவில் இரு ஹெலிக்கொப்டர்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதில் பிரான்சின் பிரபல விளையாட்டு வீரர்கள் மூவர் உட்பட 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பிரான்சின் ஓலிம்பிக் நீச்சல் வீராங்கனை,குத்துச்சண்டை வீரர் மற்றும் படகோட்டப்போட்டிகளில் பெயர்பெற்ற பெண் வீராங்கனை ஆகிய மூவரே இந்த விபத்தில் கொல்லப்பட்ட விளையாட்டு வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தனியார் தொலைக்காட்சி நிறுவனமொன்றின் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தவேளை யே அவர்கள் இந்த விபத்தில் சிக்குண்டுள்ளனர்.விபத்தில் பலியானவர்களில்; சாகச நிகழ்ச்சியை ஹெலிக்கொப்டர் ஓன்றிலிருந்து படம் பிடித்துக்கொண்டிருந்தவர்களும் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிகாரிகள் இந்த விபத்திற்கு என்ன காரணம் என தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.காலநிலை சீராக இருந்த தருணத்திலேயே இந்த விபத்து இடம்பெற்றதாகவும் தெரிவி;க்கப்படுகின்றது.
ஹெலிக்கொப்டர் சிதைவுகளிலிருந்து உடல்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது,சில உடல்களை காண முடிகின்றது,என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸ் ஜனாதிபதி அலுவலகம் இந்த சம்பவம் குறித்து கடும்கவலை வெளியிட்டுள்ளது.பிரான்ஸ் முழுவதும் துயரத்தில் சிக்கியுள்ளது.நாங்கள் மூன்று சாதனையாளர்களை இழந்து விட்டோம் என பிரான்சின் விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.