செய்திகள்

இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் மாபெரும் இரத்ததான நிகழ்வு

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் 125 ஆவது ஆண்டு நிறைவையொட்டி மாபெரும் இரத்ததான நிகழ்வொன்று பாடசாலை வளாகத்தில் இடம்பெறவுள்ளது என பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.

“உதிரம் கொடுப்போம்: உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில் எதிர்வரும் 6 ஆம் மற்றும் 13 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள இவ் இரத்ததான நிகழ்வுகளில் பாடசாலை மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் நலன் விரும்பிகள் தமது பெயர்களை முற்கூட்டி பதிவுசெய்து இரத்ததான வழங்க முன்வருமாறு பாடசாலை அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.