செய்திகள்

இறம்பொடையில் தீயில் எரிந்து முற்றாக நாசமான கடை (படங்கள்)

நுவரெலியா கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இறம்பொடை நகரத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (01) இரவு 7.00 மணியளவில் ஏற்பட்ட தீ காரணமாக கடை ஒன்று முற்றாக சேதமடைந்துள்ளதுடன் இரு கடைகள் பகுதியளவில் சேதங்களுக்குள்ளாகியுள்ளது.

இதனைக் கண்ட அயளவர்கள் நுவரெலியா மாநகர சபையின் தீயனைக்கும் பிரிவுக்கு அறிவித்தல் விடுத்ததையடுத்து தீயணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது தீயனைக்கும் பிரிவினர் குறிப்பிட்ட இடத்துக்கு விஜயம் செய்து தீயணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீக்கான காரணம் குறித்து கொத்மலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

01

S2600005

S2600006

S2600010

S2600017

S2600019