செய்திகள்

இறுதிப்போட்டியில் நியுசிலாந்தும்- ஆஸியும் மோதுகின்றன

மெல்பேர்னில் இன்று இடம்பெற்ற அரையிறுதியில் இந்தியாவை 95 ஓட்டங்களால் தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் ஆஸி அணிநுழைந்துள்ளது.

வெற்றிபெறுவதற்கு 329 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான தவான்- ரோகித் சர்மா ஜோடி சிறந்த ஆரம்பத்தை வழங்கிய போதிலும் பின்னர் ஆஸிஅணியின் துல்லியமான வேகப்பந்து வீச்சு மற்றும் களத்தடுப்பு காரணமாக இந்திய அணியால் 46 ஓவர்களில் 233 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

அணிதலைவர் டோனி சிறப்பாக துடுப்பெடுத்தாடி 65 பந்துகளில் 65 ஓட்டங்களை பெற்றார். அவர் மக்ஸ்வெலினால் அற்புதமான முறையில் ரன்அவுட் செய்யப்பட்டார். இந்திய அணிக்காக ரஹானே 44 ஓட்டங்களையும், தவான்45 ஓட்டங்களையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி ஓரு ஓட்டத்தை மாத்திரம் பெற்று ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.

ஆஸி அணி சார்பில் போக்னர் 3 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

முன்னதாக நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற ஆஸி அணி 50 ஸ்மித்தின் 105 ஓட்டங்களின் உதவியுடன் 328 ஓட்டங்களைபெற்றது பின்ஜ் 81 ஓட்டங்களை பெற்றார். ஜோன்சன் 9 பந்துகளில் பெற்ற 27 ஓட்டங்களும் முக்கியமானவையாக அமைந்தன.