செய்திகள்

இறுதிப்போட்டியே எங்கள் இலக்கு

உலக கிண்ணத்போட்டியில் இறுதி ஆட்டம்வரை செல்வதே எங்கள் முதல் இலக்கு என இந்திய அணியின் தலைவர் மகேந்திரசிங் டோனி தெரிவித்துள்ளார்.
2011 உலககிண்ணபோட்டிகளில் நாங்கள் நிகழ்த்திய சாதனையை மீண்டும் செய்வதற்கு நிச்சயமாக முயலுவோம்,ஆனால் ஆடுகளங்கள்,மைதானங்கள் வித்தியாசமானவை அதனை கணக்கிலெடுத்தே நாங்கள் ஆடவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில வருடங்களாக ஒரு நாள்போட்டிகளில் விளையாடியதை விட சிறப்பாக விளையாடுவதற்கு முயற்சிசெய்வோம்,மார்ச் 29 ம்திகதி நடைபெறவுள்ள இறுதி போட்டியில்விளையாடுவதற்கு முயல்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.