செய்திகள்

இறுதி ஓவர்களை இந்திய துடுப்பாட்ட வீரர்கள் பயன்படுத்தவேண்டும்.

2015 உலககிண்ணப்போட்டிகளில் இந்தியாவை தொடர்ச்சியாக மூன்றாவது போட்டியில் வெற்றிக்கு அழைத்துச்சென்ற பின்னர் இந்திய அணிதலைவர் டோனி, இதுவரை தனது அணி அற்புதமாக விளையாடியிருந்தாலும் எதிர்வரும் போட்டிகளில் மேலும் முன்னேற்றத்தை காண்பிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்திய பந்துவீச்சாளர்கள் இதுவரை சிறப்பாக விளையாடியுள்ளனர். அணி பெற்ற ஓட்ட எண்ணிக்கைகள் அவர்களது சுமையை குறைத்துள்ளன.முன்வரிசை ஆட்டக்காரர்கள் சிகார் தவான்,விராட் கோலிபோன்றவர்கள் பாக்கிஸ்தான், தென்னாபிரிக்கா போன்ற அணிகளுடன் சிறந்த ஆரம்பத்தை அளித்துள்ளனர்.சுரேஸ் ரெய்னா, ரஹானே போன்றவர்களும் தங்களது பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

207229

எனினும் தற்போது முக்கியமானது என்னவென்றால் இறுதி ஐந்து ஓவர்களை முழுமையாக பயன்படுத்த இந்திய பின்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் முயலவேண்டும்.

பாக்கிஸ்தானுடனான போட்டியில் இறுதி 5 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 27 ஓட்டங்களையே இந்திய அணி பெற்றது.தென்னாபிரிக்காவிற்கு எதிராக 3 விக்கெட்களை இழந்து 36 ஓட்டங்களை பெற்றனர்.

உலகபோட்டிகளில் முக்கிய அணிகளுக்கு எதிராக 300 ஓட்டங்களுக்கு மேல் பெற்ற அணிக்கு எதிராக இந்த குற்றச்சாட்டு ஏற்றுக்கொள்ள முடியாததாக தோன்றலாம்.பாக்கிஸ்தான்,தென்னாபிரிக்காவை அவர்கள் எத்தனை ஓட்ட வித்தியாசத்தில் தோற்கடித்தார்கள் என்பதை கருத்தில் கொள்ளும்போது அவர்கள் இறுதி 5 ஓவர்களில் பெற்ற ஓட்டங்கள் முக்கியமற்றவையாக தோன்றலாம். மேலும் அன்று இறுதி தருணங்களில் பாக்கிஸ்தானின் வேகப்பந்துவீச்சாளர்கள் அற்புதமாக பந்துவீசியதையும், தென்னாபிரிக்காவின் ஸ்டயின், மோர்க்கல் போன்றவர்களுக்கு எதிராக ஓரு ஓவரில்15 ஓட்டங்களை பெறுசது என்பது கடினமானதென்பதையும் கருத்தில்கொள்ளவேண்டும்.
எனினும் அடுத்த சுற்று போட்டிகள் நொக்அவுட் போட்டிகள் என்பதை கருத்தில் கொள்ளும்போது இந்திய அணி கருத்தில்கொள்ளவேண்டிய பலவீனமாக இது தோன்றுகின்றது.
மேலும் முதலில் துடுப்பெடுத்தாடும்போது எப்போது அடித்தாடவேண்டும் என்பதை தீர்மானிப்பதும் கடினமாக விடயம்.

தென்னாபிரிக்கா மற்றும் பாக்கிஸ்தானிற்கு எதிரான போட்டிகளில் வலுவான இணைப்பாட்டம் 45 ஓவர்களுக்கு பின்னரே முடிவிற்கு வந்ததையும் கருத்தில்கொள்ளவேண்டும், அந்த தருணத்தில் புதிதாக உள்ளே நுழையும் துடுப்பாட்ட வீரருக்கு உடனடியாக அடித்தாட தொடங்குவது கடினமான விடயம்.

நெட் பயிற்சிகளில் டோனி அடித்தாட முயல்வதை காணமுடிந்தது. எனினும்டோனி எப்போதும் உடனடியாக அடித்தாட விரும்பாதவர்.சில பந்துகள் விளையாடியபின்னரே அவர்அடித்தாட தொடங்குவார். பாக்கிஸ்தானுடன் 13 பந்துகளில் 18 ஓட்டங்களையும்,தென்னாபிரிக்காவுடன் 18 பந்துகளில் 11 ஓட்டங்களையும் அவர் பெற்றார்.எனினும் அவர் இரு போட்டிகளிலும் 45 ஓவர்களுக்கு பின்னரே ஆட வந்தார் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.ஐந்து மற்றும் ஏழு பந்துகள் இருக்கையில் ஆட்டமிழந்தார். அவரை போன்ற வீரர்கள் 5 பந்துகளில் மூன்று சிக்சர்களை அடிக்க கூடியவர்கள் என்பதே கருத்திலெடுக்கப்படவேண்டிய விடயம்.

206659தென்னாபிரிக்காவிற்கு எதிரான போட்டிக்ககு பின்னர் டோனி இறுதி ஓவர்களில் புதிய துடுப்பாட்ட வீரர்கள் ஓட்;டங்கள் பெறுவது கடினமானவிடயம் என குறிப்பிட்டார். அவுஸ்திரேலியாவில் எல்லைக்கோடுகள் பெரியவை.ஆடுகளங்களில் பவுன்ஸ்கள் காணப்படும், இதனால் அடித்து ஆடுவது கடினம்.

இதன்காரணமாக டோனி போன்ற வீரர்கள் 40 ஓவரிலேயே ஆட தொடங்கவேண்டும். மேலும் இந்திய அணியின் முன்வரிசை ஆட்டக்காரர்கள் தாங்கள் இறுதிவரை களத்தில் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்.