செய்திகள்

இறுதி டெஸ்ட் நாளை

இந்திய அணிக்கு விராட்கோலி டோனியின் ஓய்விற்கு பின்னர் தலைமைதாங்கும் டெஸ்ட்போட்டி இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் நவம்பர் 25 ம் திகதி பில்ஹியுஸ் பவுன்சர் பந்தில் பரிதாபகரமான முறையில் பலியான  மைதானத்தில் இறுதிடெஸ்ட் இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியில் கடந்த டெஸ்ட்போட்டியில் அறிமுகமான ராகுலிற்கு பதிலாக சுரேஸ் ரெய்னா விளையாடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேவேளை சிஹார் தவானிற்கு பதில் ராகுல் விளையாடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் இந்திய அணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முகமட் சமிக்கு பதிலாக வருன் ஆரோன் விளையாடவுள்ள அதேவேளை விக்கெட்காப்பாளராக விருத்திமன் சாஹா விளையாடுவார்.
இந்திய அணி போட்டித்தொடரை இழந்துள்ள நிலையிலேயே இறுதி டெஸ்ட் நடைபெறுகின்றது.