செய்திகள்

இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் ரோகித் சர்மா இடம்பெறுவது சந்தேகம்?

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மாவுக்கு, முகமது ஆமீர் வீசிய முதல் பந்தே இடது காலை தாக்கியது. பின்னர் அடுத்த பந்தில் ரோகித் சர்மா எல்.பி.டபிள்யூ. ஆகி வெளியேறினார்.

இந்த நிலையில் இடது கால் பாதத்தில் பந்து தாக்கியதில் சிக்கலுக்குரிய காயம் ஏதும் ஏற்பட்டிருக்கிறதா? என்று முன்எச்சரிக்கை நடவடிக்கையாக ரோகித் சர்மாவுக்கு நேற்று எக்ஸ்ரே பரிசோதனை எடுத்து பார்க்கப்பட்டது. இலங்கைக்கு எதிரான நாளைய ஆட்டத்தில் அவர் விளையாடுவாரா? என்பது போட்டிக்கு முன்பாக முடிவு செய்யப்படும்.