செய்திகள்

“இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மனித உரிமைகள் பேரவையின் உறுப்புநாடுகள் நிராகரிக்கவேண்டும்” : வெளிவிவகார அமைச்சர் ஜெனிவா கூட்டத் தொடரில் உரை

ஐநா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை இலங்கைக்கு எதிரான பிரச்சாரநடவடிக்கை என குறிப்பிட்டுள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மனித உரிமை பேரவையின் உறுப்புநாடுகள் நிராகரிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

கொழும்பில் வெளிவிவகார அமைச்சில் இருந்து வீடியோ தொழிநுட்பம் மூலம் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது  கூட்டத் தொடரில் உரையாற்றும் போதே அமைச்சர் தினேஸ் குணவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது இலங்கைக்கு எதிரான சர்வதேச குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் இலங்கை வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்கியதாக தெரிவிக்கப்படுவதை நிராகரிததுள்ள அமைச்சர்
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை செவிவழி தகவல்கள்,ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள்,அல்லது ஒருகோணாத்தை அடிப்படையாக கொண்ட விடயங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் செயற்படக்கூடாது எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மனிதஉரிமை பேரவைஉடனான இலங்கையின் தொடர்ச்சியான ஈடுபாட்டை கருத்தில் கொண்டு இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிராகரிப்பதன் மூலம் எங்களிற்கு ஆதரிக்குமாறு உறுப்புநாடுகளை கேட்டுக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை உடனடி கவனத்தை செலுத்தக்கூடிய நிலைமை இலங்கையில் காணப்படுகின்றதா அல்லது இந்த பிரச்சாரம் அரசியல் நோக்கங்களை கொண்டதா என்பதை தீர்மானிக்கும் பெறுப்பை உறுப்புநாடுகளிம் விட்டுவிடுவதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்

2015 இல் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தீர்மானத்திற்கு இணை அணுசரனை வழங்கியது.
இது எங்கள் நாட்டிற்கு எதிரானது.
அந்த தீர்மானம் நிறைவேற்றமுடியாத பல விடயங்களை உள்ளடக்கியதாக காணப்பட்டது மேலும் அந்த தீர்மானங்கள் இலங்கையின் அரசமைப்பி;ற்கு முரணாணவையாக காணப்பட்டன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்சவிற்கு மக்கள் வழங்கிய ஆணை இலங்கை மக்கள் ஜெனீவா தீர்மானத்தை நிராகரித்ததை வெளிப்படுத்தியது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆணையை அடிப்படையாக வைத்து நான் இலங்கை இணை அணுசரணை வழங்கிய தீர்மானத்திலிருந்து வெளியேறும் என நான் அறிவித்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.

-(3)