செய்திகள்

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கஞ்சா கைப்பற்றப்பட்டது

தனுஷ்கோடி அருகே 685 கிலோ கஞ்சா பொதி ஒன்று கேட்பாரற்ற நிலையில் கிடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை இந்திய கடலோரக் பாதுகாப்பு படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

தனுஷ்கோடி அருகே மூன்றாம் மணல் தீடையில் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு செல்லப்பட்டு விட்டுச் செல்லப்பட்ட 685 கிலோ கஞ்சா பொதியை நேற்று மண்டபம் கடலோர பாதுகாப்பு படையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மண்டபம் கடலோர பாதுகாப்பு படையினர் தனுஷ்கோடி கடலோரப் பகுதியில் நேற்று ரோந்து சென்றபோது மூன்றாம் மணல் தீடைப் பகுதியில் அனாதையாக கிடந்த சுமார் 685 கிலோ கொண்ட கஞ்சா பொதியை கைப்பற்றினர்.

அதை கப்பல் மூலம் மண்டபம் கடலோர பாதுகாப்பு படை அலுவலகத்துக்கு இரவே கொண்டு சென்றுள்ளனர். இது குறித்து கடலோர பாதுகாப்பு படையினர் வழக்குப் பதிவு செய்து தற்போது மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.