செய்திகள்

இலங்கைக்கு வந்த இந்திய வியாபாரி கைது!

சுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வந்து புடைவை வியாபாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இந்திய வியாபாரி ஒருவரை நேற்று கைதுசெய்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழ்நாடு, கிருஸ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த முருகானந்தன் தினேஸ்குமார் (வயது 25) என்பவரே கைது செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து 59 சல்வார்களும் கைப்பற்றப்பட்டன.

அல்வாய் நாவலடிச் சந்திப் பகுதியில் புடைவை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த இவரை, பொலிஸார் விசாரணை செய்ததில் இவர் சுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வந்திருந்தமை தெரியவந்தது. இதையடுத்து வியாபாரியை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் கூறினர்.