செய்திகள்

இலங்கைக்கு வரவேண்டாம் என பசிலுக்குச் சொன்னேன்: மஹிந்த வேதனை

எனது சகோதரன் பசில் ராஜபக்ஷ அமெரிக்காவில் இருக்கும் போது, அவரைத் தொடர்புகொண்டு நான் கதைத்தேன். அப்போது, இலங்கைக்கு மீண்டும் வர வேண்டாம், அவ்வாறு வந்தால் கைது செய்வார்கள் என்று நான் அறிவுறை கூறினேன்’ என்று முன்னாள் ஜனாதிபதியும் பசில் ராஜபக்ஷவின் சகோதரருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இருப்பினும், ‘நான் களவு செய்யவில்லை. நான் வராமளிருப்பது மஹிந்த அண்ணான உங்களுக்கு அவமானம். அதனால் நான் இலங்கைக்கு வருவேன்’ என்று அவர் எனக்கு பதிலளித்தான். ஆனால், நான் அவனிடம் சொன்னது போலவே நடந்தேறிவிட்டது’ என்று மஹிந்த கூறினார்.

‘இருப்பினும் பரவாயில்லை. நானும் 3 மாதங்கள் சிறையில் இருந்தவன் தான். நாடாளுமன்ற உறுப்பினரொருவர் ஓரிரு மாதங்கள் சிறைவாசம் அனுபவித்து வந்தால் தவறில்லை’ என்றும் மஹிந்த ராஜபக்ஷ தனது சகோதரன் தொடர்பில், மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது குறிப்பிட்டார்.