செய்திகள்

இலங்கைக்கு வருகைதரவுள்ள ரஷ்ய வெளிநாட்டமைச்சர் !

ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்கே லவ்ரோவ் இலங்கைக்கு வருகைதரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

இலங்கைக்கு வருகை தருமாறு பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் டி பெரேரா விடுத்திருந்த அழைப்பை ரஷ்ய அமைச்சர் ஏற்றுக்கொண்டிருக்கிறார். மொஸ்கோவில் கடந்த வாரம் சங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத் தன்மை தொடர்பான உயர்மட்ட மாநாடு இடம்பெற்ற போது இலங்கையின் சார்பில் அமைச்சர் அஜித் பெரேரா பங்கேற்றிருந்தார்.