செய்திகள்

இலங்கைக்கு வருகைத் தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மீண்டும் படிப்படியாக அதிகரிப்பு

நாட்டுக்கு வருகைத் தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.அத்துடன் இம்மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஜூலை மாதத்தில் கிட்டத்தட்ட 43,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கும், சுற்றுலா ஹோட்டல்களின் மின்சாரம் மற்றும் பிற தேவைகளுக்கும் எரிபொருளை வழங்கும் முறை ஏற்கனவே நடைமுறையில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.(15)