செய்திகள்

இலங்கைக்கு வருவோர் தொடர்பாக அதிகாரிகள் அவதானத்தில்

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருவோர் தொடர்பாக மிகவும் அவதானத்துடன் செயற்படுவதாக பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராட்சி தெரிவித்துள்ளார்.
தீவிரவாத அமைப்புகளினால் சர்வதேச நாடுகளுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ள நிலையிலேயே இங்கும் இது தொடர்பான அவதானத்தை செலுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி விமான நிலையங்களில் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் வெளிநாடுகளிலிருந்து வருவோர் தொடர்பாக மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இலங்கையின் பாதுகாப்பு சகல வழிகளிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
n10