செய்திகள்

இலங்கைக்கு விஜயம் செய்கிறார் சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம்

சிங்கப்பூரின் வெளிவிவகார மற்றம் சட்டத்துறை அமைச்சர் கே.சண்முகம் இலங்கைக்கும் இந்தியாவுக்குமான விஜயத்தை இன்று திங்கட்கிழமை ஆரம்பிக்கின்றார்.

இலங்கையில் அமைச்சர் சண்முகம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுனா மகேந்திரன் ஆகியோரை சந்திக்கவுள்ளார்.
இலங்கைக்கும் சிங்கப்ப+ருக்கும்மிடையிலான வலுவான நட்புறவுகளை மீள உறுதிப்படுத்துவதே அவரின் விஜயத்தின் நோக்கமாகும்.