செய்திகள்

இலங்கைக்கு விஷேட தூதுவரை அனுப்புகிறார் ஐ.நா. செயலாளர் நாயகம்

ஐ.நா செயலாளர் நாயகத்தின் உயர்மட்டப் பிரதிநிதி ஒருவர் இவ்வாரம் இலங்கை வரவுள்ளார். இலங்கைப் போர்க் குற்றங்கள் தொடர்பில் ஐ.நா.வினால் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை வெளியிடப்படுவது ஆறு மாதங்களுக்குப் பிற்போட முடிவு எடுக்கப்பட்ட நிலையில், ஐ.நா உயர்பிரதிநிதியின் இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது.

ஐ.நா பொதுச்செயலரின் உயர்மட்ட அரசியல் பிரதிநிதியான ஜெப்ரி பெல்ட்மன், வரும் சனிக்கிழமை இலங்கை வரவுள்ளார். அவர், மூத்த அரசாங்க அதிகாரிகள், அரசியல்கட்சிகள், சிவில் சமூக குழுக்களின் பிரதிநிதிகளைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.

“இது அவரது முதல் இலங்கை விஜயம். இலங்கைத் தலைவர்களுடன் பரஸ்பரம் கரிசனைக்குரிய பல்வேறு விவகாரங்கள் குறித்து உரையாடுவதற்கு அவர் எதிர்பார்த்துள்ளார்” என்றும் ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.