செய்திகள்

இலங்கைச் சிறுமிக்கு விஸா வழங்க அவுஸ்திரேலியா மறுப்பு

இலங்கையைச் சேர்ந்த எட்டுவயதுச் சிறுமியான எலிசா பொன்சேகாவுக்கு அவுஸ்திரேலியா செல்ல தற்காலிக விசா மறுக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் கிறிஸ்தவ நிலையம் ஒன்றில் பணிபுரிய இலங்கைத் தம்பதியருக்கு அந்த நாட்டு குடிவரவுத் திணைக்களம் தற்காலிக விசா வழங்கியுள்ளது.

இந்த நிலையில் இந்தச் சிறுமி மனநலிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமையினால் அவருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளதாக சிறுமியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். தனது மகள் எலிசா பொன்சேகா ஆரோக்கியமாக இருப்பதாக சிறுமியின் தந்தை அஞ்சலோ பொன்சேகா கூறியுள்ளார்.

தனது மகளை தாமே பொறுப்பேற்பதாகவும் அந்த நாட்டு அரசாங்கத்தின் உதவி தமக்குத் தேவையில்லை எனவும் அவரது தந்தை மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலும் தாங்கள் அரசாங்கத்தை நம்பியிருக்கவில்லை எனக் கூறிய அவர் ஒரு பெற்றோராக எலிசாவுக்கு அனைத்தையும் வழங்கியதாகவும் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றாலும் அதனையே தாம் செய்வர் என்றும் அஞ்சலோ பொன்சேகா தெரிவித்துள்ளார்.