செய்திகள்

இலங்கையர்கள் உள்ளிட்ட 65 அகதிகள் நியூஸிலாந்திடம் கோரிக்கை!

இந்தோனேஷியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் உள்ளிட்ட 65 அகதிகள் தமக்கு உதவுமாறு நியூஸிலாந்து அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சட்டவிரோதமாக நியூஸிலாந்துக்கு கடல் மார்க்கமாக செல்ல முற்பட்ட நிலையில் கடலில் தத்தளித்த இவர்களில் இலங்கை, மியன்மார் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அகதிகள் அடங்குவதாக தெரியவந்துள்ளது.

தாம் தமது நாட்டுக்கு திரும்புவது பாதுகாப்பற்றது எனவும், தமக்கு புகழிடம் வழங்குமாறும் இவர்கள் நியூஸிலாந்து அரசுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

தமக்கு அமைதியான வாழ்வே வேண்டும் என்றும் சில அரசியல் பிரச்சினைகள் மற்றும் வன்முறைகளாலேயே தாம் சொந்த நாட்டை நீங்கி வந்ததாகவும் மேற்கு தீமோர் – குப்பாங் தடுப்பு முகாமில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ள குறித்த அகதிகளில் ஒருவர் குறிப்பிட்டுள்ளதாக நியூஸிலாந்து ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.