செய்திகள்

இலங்கையர் மூவர் துபாய் வங்கியில் சட்டவிரோத வைப்பு – ரூ. 10 பில்லியன் அமெ.டொலரை மீட்க நடவடிக்கை

பிரபுத்துவ நிலையிலுள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரினால் பில்லியன் கணக்கான நிதி சட்டவிரோதமாக துபாய் வங்கிகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்ப்டுள்ளது அதனை மீளப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

பத்து பில்லியன் அமெரிக்கன் டொலர் நிதி இவ்வாறு சட்டவிரோதமாக வைப்புச் செய்யப்பட்டுள்ளதுடன் அவற்றை மீளப்பெற்றுக் கொள்ளும் வகையில் விசேட ஜனாதிபதி செயலணி ஒன்று உருவாக்கப்பட்டு செயற்படுத்தப்படவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜீத சேனாரத்ன தெரிவித்தார்.

அரச வளங்கள் மற்றும் நிதிகளை மீளப்பெற்றுக் கொள்ளும் வகையில் செயற்படுவதற்கு ஜனாதிபதி செயலணியொன்றை அமைப் பதற்கான அமைச்சரவைப் பத்திரமொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்துள்ளதுடன் அமைச்சரவை அதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

இலங்கையர் அல்லது வேறு நபர்களால் சட்டவிரோதமாகப் பெற்றுக் கொள்ளப் பட்ட வளங்கள் அல்லது நிதியினை வெளிநாடுகளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிலர் வைத்துள்ளனர்.

இது தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதுடன் அது சம்பந்தமான விசாரணைகள் நடத்தப்பட்டு அந்த நிதியை மீள திறைசேரிக்குப் பெற்றுக்கொள் ளும் வகையில் இந்த ஜனாதிபதி செயலணி செயற்படவுள்ளது.

இவ்வாறு 10 பில்லியன் டொலர்கள் வெளிநாட்டு வங்கிகளில் முக்கியமான நபர்களால் வைப்பிலிடப்பட்டுள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் இவ்வாறு தமது கணக்குகளில் வைப்புச் செய்துள்ளனர். இதற்கிணங்க துபாய் தேசிய வங்கியில் 1.064 பில்லியன் அமெரிக்கன் டொலர் வைப்புச் செய்யப்பட்டுள்ளது.

முக்கிய பதவியிலிருந்த  ஒருவர் மற்றும் இன்னுமொருவர் இணைந்து கூட்டுக்கணக்கில் 500 மில்லியன் ரூபாவை வைப்புச் செய்துள்ளதாகத் தெரிய வருகிறது.

விசாரணைக்கு முன்பதாக அவர் பற்றிய பெயர் விபரங்களை குறிப்பிட முடியாது. மேற்படி நிதியில் 600 மில்லியன் ரூபா மீளப்பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஏனைய பில்லியன் கணக்கான டொலர் நிதியினை நாட்டிற்கு மீளப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

உலக வங்கி மற்றும் இந்திய வங்கிகளின் ஒத்துழைப்புடன் இது தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு நாட்டின் திறைசேரிக்கு மீளப் பெற்றுக்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.