செய்திகள்

இலங்கையின் அவசர உதவிக்குழு நேபாளத்திற்கு புறப்பட்டு சென்றது (படங்கள்)

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பூமி அதிர்ச்சியால் பாதிக்கபட்டுள்ளவர்களுக்கு உதவுவதற்கான இலங்கை இராணுவத்தின்  உதவிக்குழு இன்று அதிகாலை அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை புறப்பட்டுள்ள உதவிக் குழுவினரை ஏற்றிய விமானம் இன்று காலை 10.30 மணியளவில் நேபாளம் காத்மண்டு விமான நிலையத்தை சென்றடைந்துள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
விசேட மருத்துவர்கள் மற்றும் மீட்பு பிரிவினர் அடங்களாக 48 பேர் கொண்ட குழுவினர் இவ்வாறு முதற்கட்டமாக அங்கு அனுப்பி வைக்கப்பட்டு;ள்ளதாகவும் தேவைப்பட்டால் அனுப்புவதற்கு குழுவொன்று தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நேபாளத்தில் மருத்துவத் துறையில் கல்விக்கற்கும் இலங்கை மாணவர்களையும் குறித்த உதவிக்குழுவினருடன் இணைத்துக்கொள்ள நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
04
03
02