செய்திகள்

இலங்கையின் உள்ளக பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கு அமெரிக்கா பல வழிகளில் உதவ முடியும்: மங்கள சமரவீர

இலங்கையின் உள்ளக பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கு அமெரிக்கா பல வழிகளில் உதவ முடியும் என்று தெரிவித்துள்ள வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர ,  பொறுப்புக்கூறல் பொறிமுறை தற்போது திட்டமிடப்பட்டு வருகிறது என்றும் கூறியுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க ராஜாங்க அமைச்சர் ஜோன் கெரியை வரவேற்று இன்று கொழும்பில் ஆற்றிய வரவேற்பு உரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தனதுரையில் மேலும் தெரிவித்ததாவது,

சுதந்திரம் கிடைத்த நாட்களிலிருந்து வெளியுறவு அமைச்சின் இல்லமாக இருந்து வந்திருக்கின்ற குடியரசு கட்டடத்துக்கு அமெரிக்க இராஐங்க செயலாளர் ஜோன் கெரியை வரவேற்பது ஒரு பெரும் கௌரவமாகவும்.சிறப்புரிமையாகவும் இருக்கின்றது.

செயலாளர் கெரியின் வருகை சிறிலங்காவைப் பொறுத்த வரை சிறப்பு வாய்ந்த சந்தர்ப்பமாக இருக்கிறது. ஏனெனில் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு  காலத்திற்குள், அச்சொட்டாக சொல்லப் போனால் 43 வருடங்களில், அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஒருவர் முதல் தடைவையாக உத்தியோக பூர்வமாக வருகை தந்திருப்பதே அதற்கு காரணமாகும்.

இந்த முக்கிய வருகையானது சர்வதேச விவகாரங்களின் மையத்திற்கு எமது சிறிய தீவு  திரும்பி வந்திருப்பதை குறித்துக் காட்டுவதாக இருப்பதாக நான் நம்புகின்றேன். இன்று காலையிலே வெளியுறவு அமைச்சரான நான் நியமிக்கப்பட்டு ஒரு மாதத்திற்குள் வோஷpங்டனில் தொடங்கிய ஒரு பேச்சுவார்த்தையை நாங்கள் தொடர்ந்தோம். ஒரு பன்முக ரீதியான இருதரப்பு உறவுகளை கட்டியெழுப்பவும் எமது மக்களுக்கிடையே  வலுவான பிணைப்புகளை உருவாக்கவும் நாம் உடன்பட்டுக் கொண்டோம்.

இந்த செயன்முறையை கிரமமான ஒரு முறையில் தொடர்வதற்கு எமக்கு வழிவகுக்கும் விதத்தில் ஒரு பங்காண்மை பேச்சுவார்த்தைகள் மூலம் எமது உறவை சம்பிரதாய பூர்வமானதாக ஆக்கவும் நாம் உடன்பட்டிருக்கின்றோம். எமது இரு நாடுகளுக்குமிடையேயான உறவுகள் அமெரிக்க அரசியலமைப்பு நிறைவேற்றப் பட்டதிலிருந்தே இருப்பில் இருந்திருக்கின்றன. இந்தக் காலப் பகுதியிலே புதிய இங்கிலாந்திலிருந்து வந்த கடலோடிகள் காலி துறைமுகத்தில்  நங்கூரமிட்டிருந்ததை பதிவுகள் காட்டுகின்றன.

வெசாக்கின் போது பறக்கவிடப்படும் பௌத்த கொடியின் இணை வடிவமைப்பளாரான சேர் ஹென்றி ஒல்கொட்உள்ளிட்ட அமெரிக்க மிஷனரிகள் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் எமது சிறப்பான பாடசாலைகளில் சிலவற்றை நிறுவி அவற்றைப் பேணுவதில் முக்கிய வகிப்பாகத்தை வகித்திருக்கிறார்கள்.

செயலாளர் கெரியின் இலங்கை வருகை நன்னிமித்தமான ஒரு சந்தர்ப்பத்தில் நிகழ்ந்திருக்கிறது.
ஒரு வளமாக இந்த நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உலகெங்கனும் வாழும் பௌத்தர்கள் புத்த பெருமானின் தத்துவங்களான சகிப்புத்தன்மை மற்றும் அஹிம்சை முதலியவற்றை தமது வீடுகளிலும் வீதிகளிலும் அழகான கடதாசி விளக்குகளை ஏற்றுவதன் மூலம் நாளை கொண்டாடுவார்கள். மறுபுறம்,  ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மட்டும் எதிர்த்த நிலையில் எமது அரசியலமைப்புக்கான 19வது திருத்தம் கடந்த செவ்வாயன்று நிறைவேற்றப்பட்டதை சிறிலங்கா  மக்கள் கொண்டாடிக்கொண்டிருக்கும் ஒரு வேளையிலும் அது நிகழ்ந்திருக்கின்றது.

நீண்ட தொலைவுக்கு எட்டக் கூடிய அரசியலமைப்பு மற்றும் சனநாயக சீர் திருத்தங்களை அறிமுகப்படுத்திய 100 நாள் நிகழ்வுத்திட்டத்தின் சிகரமாகவும் அது இருக்கின்றது. சனநாயகம் இன ஓருங்கிசைவு என்ற தூண்களின் மீது கட்டப்பட்டு புதிய சிறிலங்காவுக்கான அடித்தளத்தை இட்டுக் கொண்டு முழு அளவிலான பாராளுமன்ற சனநாயகமாக ஆகுவதற்கான பாதையில் சிறிலங்கா இன்றைக்கு பயணித்துக் கொண்டிருக்கிறது.

இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக எங்களுக்குப் போக்குக் காட்டிக்கொண்டிருக்கின்ற அதிகரித்த பொருண்மியம் மற்றும் செழுமைகள் என்ற கனிகளை அறுவடை செய்ய இது எமக்கு வழிவகுக்கும்.
புதிய சிறிலங்காவிலே பொறுப்புக் கூறுதலை உறுதி செய்வது நல்லிணக்க செயல்முறையின் ஒரு முக்கிய ஆக்கக் கூறாக இருக்கும் என்பதோடு எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டது போல் சர்வதேச தொழில்நுட்ப உதவியுடன் உள்ளுர் பொறுப்புக் கூறும்  பொறிமுறையின் நிர்மாணமானது இப்பொழுது திட்டமிடப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த சூழமைவிலேயே உள்ளுர் இயலுமைகள் வளமாக்கப்படுதல் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்குதல் என அமெரிக்கா எமக்கு உதவக் கூடிய பல விடயப்பரப்புக்களும் இருக்கின்றன.

இப்பொழுது நடுத்தர வருமானத்தைப் பெற்றுக் கொண்டிருக்கும் நாடான சிறிலங்காவானது தனியாக வெளிநாட்டு உதவிகளில் மட்டும் தங்கியிருக்க முடியாது. எமது பொருண்மியத்துக்கு ஒரு உந்து சக்தியை கொடுக்கும் விதத்திலான பரந்துபட்ட ஒரு மூலோபாயத்தின் ஒரு பகுதியாக வெளிநாட்டு நேரடி முதலீடுகளைக் கவர்ந்திருப்பதென்பது எமது அரசின் நலன்களுக்கு  சிறப்பானதாக அமையும்.

பல வருடங்களாகவே சிறிலங்காவானது உல்லாசப் பயணிகள் சொர்க்கம் என்று கருதப்படுகின்றது. ஆனால் அரசானது சிறிலங்காவைப் ஒரு முதலீட்டாளாகளின் சொர்க்கமாக மாற்றும் முனைப்புடனிருக்கிறது.
அப்படிச் செய்வதற்கென நாங்கள் ஓரு விதிகள் அடிப்படையிலான முதலீட்டு காலநிலையை உருவாக்கும் செயல்முறையில் இருக்கின்றோம். இப்போது சிறிலங்காவில் உருவாகிக் கொண்டிருக்கும் பொருண்மிய வாய்ப்புக்களின் அனுகூலங்களை அமெரிக்க முதலீட்டாளர்கள் பெற்றுக் கொள்வார்கள் என்று நான் எதிர்பார்க்கின்றேன்.

இன்று இன்னொரு பொழுதிலே செயலாளர் கெரி சனாதிபதி சிறிசேனாவுடன் ஒரு நல்லெண்ண  சந்திப்பை மேற்கொள்வதோடு பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவுடன் கலந்துரையாடலை மேற்கொள்ளவிருக்கிறார்.
இந்த கலந்துரையாடல்கள் இரண்டு தரப்புக்களும் தங்கள் தங்கள் முந்துரிமைகளை  புரிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பைத் தருமென்றும் இந்தக் கலந்துரையாடல், இருப்பில் இருக்கும் நெருக்கமான நட்பு பூர்வமான உறவுகளை உயர்ந்த மட்டத்துக்கு கொண்டு போகும் என்றும் நான் நம்புகின்றேன்.

சிறிலங்காவின் மீதும் அதன் உள்ளார்ந்த திறன்கள் மீதும் விடப்பிடியான நம்பிக்கை கொண்டிருப்பவரும் கடந்த சில மாதங்களில் அவர் மூலம் நாம் பெற்றுக் கொண்ட ஆதரவு மற்றும் உற்சாகமூட்டல்களுக்காவும் உதவிச் செயலாளர் நிஷா பிஸ்வாலுக்கு நன்றி கூற இந்தச் சந்தர்ப்பதை பயன்படுத்தவும் நான் விரும்புகின்றேன்.

இன்னும் பல உயர் மட்ட வருகைகள் வரும் என்றும் அமெரிக்கவுக்கும் சிறிலங்காவுக்கு மிடையேயான மிகச் சிறப்பு வாய்ந்த உறவினுடைய ஆரம்பமே இன்றைய வருகை என்றும் நான் எதிர்பார்க்கிறேன்.

செயலாளர் கெரி மற்றும் அவரது பேராளர் குழுவினர் இங்கு தங்கியிருக்கும் காலம் இனிமையானதாக அமையட்டும் என வாழ்த்துவதோடு எமது அழகான பல்வகைமை  வாய்ந்த தீவின்  மேலும் பல அம்சங்களை அவருக்கு காட்டக் கூடிய வித்தில் மிக விரைவாகவே அவர் இன்னொரு முறை இங்கு வருகை தருவார் என்றும் நம்புகின்றேன்.