செய்திகள்

இலங்கையின் உள்ளக விசாரணையில் ஐநா தலையிடாது ஜனாதிபதி லண்டனில் தெரிவிப்பு

இலங்கையில் நடந்த யுத்தத்தில் இரண்டு தரப்பிலும் உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

இது தொடர்பாக இலங்கையில் விசாரணை நடத்த உள்ளோம். அந்த உள்ளக விசாரணையில் ஐ.நா தலையிடாது.

இந்த விசாரணையில் ஒருமாத காலத்துக்குள் யுத்தக் குற்றம் பற்றி விசாரிக்க முடியும் என தான் எதிர்பார்ப்பதாக லண்டனிலுள்ள பீபீசி ஊடகத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மேலும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ”ஒரு சீரான சட்டம் மற்றும் பாரபட்சமற்ற முறையில் விசாரணையும் தண்டனையும்” வழங்கப்படவுள்ளது எனத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த உள்ளக விசாரணைக் குழுவானது சிறந்த ஆய்வு நடுவர்களால் அமைக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.